பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி போலீஸார் எதிர்ப்பு

Forums Inmathi News பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி போலீஸார் எதிர்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12147
    Inmathi Staff
    Moderator

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன் மற்றும் கருப்பசாமி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசியர் முருகன், கருப்பசாமி ஆகியோர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி இளந்திரையன் முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அதில், மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்குமாறு, முருகனும், கருப்பசாமியும் நிர்மலா தேவியிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் புகார் அளித்த கல்லூரி மாணவிகளின் மேற்படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும் குற்றவாளிகள் தலைமறைவாக வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணை 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This