சேலம் எட்டுவழிச் சாலை நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Forums Inmathi News சேலம் எட்டுவழிச் சாலை நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12095
    Inmathi Staff
    Moderator

    சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    நிலக் கையகப்படுத்தல் சட்டத்தின் 105வது பிரிவை பயன்படுத்தி, சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956ன் படி நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் நிலத்தை கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதாகவும், ஆனால், சாலை, ராணுவப் பயன்பாடு, அணு உலை உள்ளிட்ட 13 தேவைகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது என்றும், இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தடுப்பதாக உள்ளதால், நிலக் கையகப்படுத்தல் சட்டத்தின் 105வது பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரியும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், நிலக் கையகப்படுத்தல் சட்டத்தின் 105வது பிரிவால் மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This