சென்னை வந்த மு.க.அழகிரியை விமான நிலையம் சென்று திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் வரவேற்றார். அவரை கட்சிக் கட்டுப்பாட்டை மீறியாதாக அன்பழகன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மதுரையிலிருந்து சென்னை வந்த மு.க.அழகிரியை சென்னை விமான நிலையத்தில், வேளச்சேரி கிழக்குப்பகுதி திமுக பகுதிச்செயலாளர் ரவி வரவேற்றார். பின்னர் அவர் திமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். நாளை அழகிரி அமைதிப் பேரணி மூலம் தனது செல்வாக்கைக் காட்ட உள்ள நிலையில் இந்த நிகழ்வு திமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.