பாஜகவுக்கு எதிராக கோஷம் போட்டதாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஜாமீன்

Forums Inmathi News பாஜகவுக்கு எதிராக கோஷம் போட்டதாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஜாமீன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12093
    Inmathi Staff
    Moderator

    பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாசிக பாஜக ஆட்சி ஒழிக என ஆராய்ச்சி மாணவி சோபியா கோஷம் எழுப்பியதாக கூறி அவ்விருவரும் விமான நிலையத்தில் வைத்து வாக்குவாதம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து,

    சோபியா மீது ஐபிசி பிரிவு 505 (1) (பி) பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், ஐபிசி 290 பொதுஇடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவித்தல், தமிழ்நாடு சிட்டி போலீஸ் பிரிவு 75 போலீஸாருக்கு ஒத்துழைக்காதது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதன்பின், போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற 3-வது நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் இரவில் சோபியாவை ஆஜர்படுத்தினர். அப்போது ஐபிசி பிரிவு 505 (1) (பி) இதற்குப் பொருந்தாது என ரத்து செய்து, மற்ற இரு வழக்குகளில் சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் நெல்லை மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This