தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், தமிழ் தவிர, இதர மொழிப்பாடப் புத்தகங்கள் இன்னும் விநியோகம் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதனால், வரும் 10ஆம் தேதி தொடங்கவுள்ள காலாண்டு தேர்வுகளை 11ஆம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பி.டி.எஃப். வடிவில் இணையதளத்தில் உள்ள பாடப்புத்தகங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.