Forums › Communities › Farmers › மழை நீரை சேமிக்க அகழி…செழித்த விவசாயம்!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
September 3, 2018 at 6:30 pm #12058
Inmathi Staff
Moderatorமழை நீரை நிலத்தில் சேகரித்து செலவில்லாமல் விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கிளங்காட்டூரைச் சேர்ந்த விவசாயி ‘துபாய்’ காந்தி.
தமிழகத்தில் விவசாயம் செய்ய அதிகளவு தண்ணீர் தேவை, செலவும் அதிகரித்து வருகிறது என சொல்லும் விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.காந்தி கூறியதாவது:
கிளாங்காட்டூரை சுற்றிலும் கரிசல் மண் பூமி, எனவே தண்ணீர் நீண்ட நாட்களுக்கு வற்றாது. எனவே பத்து ஏக்கர் நிலத்தை சுற்றிலும் பழங்கால அரண்மனையை சுற்றி இருப்பது போல10 அடி அகலத்தில் அகழி வெட்டினேன்.
வயல்களில் குதிரைவாலி, கேழ்வரகு, தண்டு கீரை,புளிச்ச கீரை உள்ளிட்ட கீரைவகைகளை பயிரிட்டுள்ளேன். குதிரைவாலி பயிர் இரண்டு மாதங்களில் அறுவடையாகும்; கிலோ 29 ரூபாய்க்கு வியாபாரிகள் வந்து வாங்கி கொள்கின்றனர். இரண்டு மாத விளைச்சலுக்கு பின்48 ஆயிரம் ரூபாய்க்கு லாபம் கிடைத்தது. தண்டு கீரை, புளிச்ச கீரையைசிறு வியாபாரிகள் தேடி வந்து வாங்கிச்செல்கின்றனர்
Courtesy: Dinamalar
.மழை நீரை சேகரித்தாலே போதிய விளைச்சல் கிடைத்து விடும். மழை நீரில்தான் சத்துக்கள் அதிகம்; அதிக மகசூல்எடுக்கலாம். எங்கள் பகுதியில் களிமண் தரை என்பதால் தண்ணீர் அதிகம் உறிஞ்சாது; நிலங்களை சுற்றிலும் மழை நீர் சேகரிப்பு அகழி வெட்டியுள்ளதால் கால்நடைகள் விவசாய நிலங்களுக்கு வராது. கால்நடை உணவு: எந்த இடத்திலும் தண்ணீரை பாய்ச்சுவதற்கு மின்சாரத்தை பயன்படுத்தவில்லை.
பண்ணை குட்டை, மழை நீர் வாய்க்கால்கள்,குழாய்கள் மூலம் வயல்களுக்கு தண்ணீர்செல்கிறது. வாய்க்கால்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைத்துள்ளேன். குதிரைவாலி அறுவடைக்கு பின் உள்ள தட்டைகள் கறவை மாடுகளுக்கு சிறந்த உணவாகிறது. ஏழை விவசாயிகளுக்குஅரசு பண்ணை குட்டைகள் அமைத்துஅதன் மூலம் கிடைக்கும் மழைநீரை வைத்து விவசாயம் செய்யவழி வகை செய்ய வேண்டும் என்றார்.
தொடர்புக்கு 09629038404 .
– வி. சரவணகுமார், திருப்புவனம்நன்றி: தினமலர்
எனக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 10 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். 15 ஏக்கர் நிலத்தில் விழும் மழை நீர் வரும்படி சிறு சிறு வாய்க்கால்கள் வெட்டி அதனை அகழியுடன் இணைத்துள்ளேன். 10 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு அடி உயரம் சரிவாக வருமாறு வடிவமைத்துள்ளேன். 40 சென்ட் நிலமாக 10 ஏக்கரையும் பிரித்து 2 ஏக்கருக்கு ஒரு இடத்தில் 5க்கு5அடி அகலத்தில் சிமென்ட் தொட்டி கட்டி அதனை மழை நீர் வாய்க்கால்களுடன் பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் இணைத்துள்ளேன்.மழை நீர் சேகரிப்பு: சிமென்ட்தொட்டிகளில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் சென்று வயல்களில் விழுமாறு வடிவமைத்துள்ளேன்.
வாய்க்கால்களிலும்25 அடி துாரத்திற்கு ஒரு இடத்தில் 4க்கு4 அடி அகலத்தில் குழி வெட்டி அதில்உள்ள களிமண்ணை அகற்றிவிட்டு சவடு மண்ணும் பெருமணலும் கலந்து கொட்டி அதில் தென்னங்கன்றை நட்டுள்ளேன். வரப்புகளிலும் குறிப்பிட்ட துாரத்திற்கு இம்முறையில் கரை அமைத்துள்ளேன்.
இதன்மூலம் மழை காலங்களில் சவடு மணல், பெரு மணல் கலவையில் மழை நீர் சேகரிக்கப்படுகிறது. தோராயமாக 250 லிட்டர் தண்ணீர் சேகரிக்கப்படுவதாக கணக்கிட்டுள்ளேன்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.