தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை இளம் பெண்ணுடன் வாக்குவாதம்

Forums Inmathi News தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை இளம் பெண்ணுடன் வாக்குவாதம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12056
    Inmathi Staff
    Moderator

    தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ‘ பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்ட இளம்பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த தமிழிசை, அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று அந்தப் பெண் விமானத்துக்குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்திலும் முழக்கமிட்டதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.

    வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த இளம்பெண் மீது புகார் அளித்த தமிழிசை அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார். விசாரணையில், அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த  மருத்துவரின் மகள் சோபியா என்பதும், கனடாவில் பயின்று வரும் அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்ததும் தெரியவந்தது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This