மெரினாவில் ஜெ. நினைவிடம் அமைக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Forums Inmathi News மெரினாவில் ஜெ. நினைவிடம் அமைக்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12053
    Inmathi Staff
    Moderator

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தேசிய மக்கள் கட்சித் தலைவர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மக்கள் வரிப் பணத்தை, பள்ளிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால், தாம் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி கடற்கரையில் கட்டிடம் கட்ட அனுமதியில்லை என்பதால் இனிமேல் மெரினாவில் நினைவிடங்கள் கட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிடவும் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு வந்தது. விசாரணைக்குப் பிறகு மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் வரும் 19ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கே ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This