தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், அத்துமீறி தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பூமி, பால்குமார், சதீஸ், துரைமுருகன், அலெக்ஸ்பாண்டியண் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேர் துபையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுற்றிவளைத்த ஈரான் கடற்படையினர், தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.