வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

Forums Inmathi News வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12023
    Inmathi Staff
    Moderator

    வளர்ச்சித் திட்டப் பணிகள் முறையாக மக்களை சென்று அடைகிறதா என இன்று 4 மாவட்ட ஆட்சியர்களை நேரில் அழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களை தொடர்ந்து அழைத்து அந்தந்த மாவட்டங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் திட்டப் பணிகள், குடிமராமத்துப் பணிகள், விவசாயம் சார்ந்த பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிவதோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் இன்று திண்டுக்கல் , விழுப்புரம், கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டு தங்கள் மாவட்ட நிலவரங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, காமராஜ், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This