சென்னையில் மெட்ரோ ரயில் 3ம் கட்ட பணிகள் துவக்கம்

Forums Inmathi News சென்னையில் மெட்ரோ ரயில் 3ம் கட்ட பணிகள் துவக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12015
    Inmathi Staff
    Moderator

    சென்னையில் இரு கட்டங்களாக நடைபெற்ற மெட்ரோ ரயில் பணிகளின் மூன்றாம் கட்ட திட்ட பணிகள் துவங்கப்பட்டதை தொடர்ந்து மண் பரிசோதனை நடைபெறுகிறது. மாதவரம் முதல் சிறுசேரி வரை 45 புள்ளி 77 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படவுள்ளது.

    அதில் காஞ்சிபுரம் மாவட்டம் OMR சாலையில் கொட்டிவக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் வர உள்ளன. கொட்டிவாக்கம் நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுகுப்பம், பி.டி.சி காலணி, ஓக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் பேட்டை, காரப்பாக்கம்,சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான நில அளவை மேற்கொள்ளும் ஆய்வு பணிகள் கடந்த மாதம் சென்னை OMR சாலையில் உள்ள பெருங்குடியில் துவங்கப்பட்டன. அடுத்த கட்டமாக நேற்று இந்தப் பகுதிகளில் மண் பரிசோதனை நடைபெற்றது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This