சேலத்தில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி கணக்காசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கணக்கு ஆசிரியராக உள்ளார். இவர், 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து வழக்கு சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை நடத்தினர். அதில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, சதீஷ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டா