மதுரை மருத்துவக்கல்லூரி ராகிங் விவகாரம்-,மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய முடிவு

Forums Inmathi News மதுரை மருத்துவக்கல்லூரி ராகிங் விவகாரம்-,மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய முடிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12011
    Inmathi Staff
    Moderator

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாருக்கு ஆளான 20 மாணவர்களை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்த புகார் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் முதலில் புகார் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து ராகிங் தடுப்புக் கமிட்டியிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ராகிங் நடைபெற்றதைக் கண்டறிந்த அவர், ராகிங் செய்த கேரள மாணவர்கள் மூன்று பேர் உள்பட 20 மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

    சஸ்பெண்ட் உத்தரவு வந்தால் சம்பந்தப்பட்ட 20 மருத்துவ மாணவர்களும் கல்லூரியிலிருந்து 6 மாதங்களுக்கும், கல்லூரி விடுதியிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This