இடைத்தேர்தலுடன் தினகரன் கட்சி காணாமல் போகும் என ஓ.பி.எஸ்

Forums Inmathi News இடைத்தேர்தலுடன் தினகரன் கட்சி காணாமல் போகும் என ஓ.பி.எஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12005
    Inmathi Staff
    Moderator

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலோடு அ.ம.மு.க. என்ற அணி இல்லாமல் போய்விடும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 303 வது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள பூலித்தேவரின்  நினைவு மாளிகை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, மணிகண்டன்,  O.S.மணியன், பாஸ்கரன், துரைக்கண்ணு  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும், அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This