காளியம்மன் கோயில் விழாவையொட்டி கடலில் நடந்த பாய்மரப்படகு போட்டி

Forums Communities Fishermen காளியம்மன் கோயில் விழாவையொட்டி கடலில் நடந்த பாய்மரப்படகு போட்டி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12003
    Inmathi Staff
    Moderator

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இக்கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் விழாக்குழுவினர் சார்பில் வடக்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள கடல் பகுதியில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பாய்மர படகுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசான ரூ.25 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த படகிற்கும், 2-வது பரிசான ரூ.20 ஆயிரத்தை வடக்கு புதுக்குடி ஊரை சேர்ந்த படகிற்கும், 3-வது பரிசான ரூ.15 ஆயிரத்தை தொண்டி ஊரை சேர்ந்த மற்றொரு படகிற்கும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரத்தை வல்லவன்பட்டினம் ஊரை சேர்ந்த படகிற்கும் வழங்கப்பட்டது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This