ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை

Forums Inmathi News ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11976
  Kalyanaraman M
  Keymaster

  ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் .எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

  மத்திய அரசின் சீர்மிகு நகரங் கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டம், நாடு முழுவதும் செயல்படுத்தப் படும் முன்னோடித் திட்டம், தமிழக வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்புக் கும் முக்கியமான திட்டம்’ என்று பாராட்டியுள்ள மு.க.ஸ்டாலின், பல மாதங்கள் ஆகியும் இப்பணிகளில் முன்னேற்றம் இல்லை என்று கூறியிருக்கிறார். திட்டத்தின் செய லாக்கம் குறித்து அவர் அறிய வில்லை என்பதையே இது காட்டுகிறது.

  தமிழகத்தில் உள்ள 11 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களிலும் கடந்த ஓராண்டில் திட்டப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இந்திய அளவில் முதல் 20 இடங்களில் முக்கிய இடங் களைப் பெற்றுள்ளதே இதற்கு சான்று.

  இதில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்தும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை மாநகரில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் திறந்தவெளி மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டது.

  இறுதியில் தொழில்நுட்பம், விலைப்புள்ளிகள் அடிப்படையில், குறைந்த ஒப்பந்தப்புள்ளி விலை விகிதம் அளித்த கேரள அரசு சார்ந்த கெல்ட்ரான் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தேவையான மின்னணுத் தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது. இந்திய கடற்படைக்குத் தேவையான மின்னணு தொழில்நுட்பங்களையும் வழங்கியுள்ளது.

  இதுகுறித்த உண்மையை தெரிந்துகொள்ளாமல், அரசின் மீது குறை கூறவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வழக்கம் போல வேண்டுமென்றே காழ்ப் புணர்ச்சியோடு ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

  மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பற்றி அறிக்கை விடுவது நீதிமன்ற அவ மதிப்புக்கு உள்ளாகும் என்ற அடிப்படைகூட அறியாமல் அவர் அறிக்கை விட்டிருப்பது சிறுபிள் ளைத்தனமானது.

  கேரள மாநில அரசு சார்ந்த நிறுவ னத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனம் எனது பினாமி நிறுவனம் என குற்றம்சாட்டியிருப்பது உள்நோக்கம் கொண்டது. திமுக ஆட்சியில், திமுகவினர் தாங்கள் விரும்பியவர்களுக்கு, தங்களது விருப்பப்படி நடப்பவர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுத்தனர்.

  தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றி அமைப்ப தற்கான ஒப்பந்தப்புள்ளிகள், வெளிப்படையான ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றியே இறுதி செய்யப்படுகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.

  உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தேசிய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகள் கூறி ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். இத்தகைய அவதூறுகளைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This