விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க வைகோ கோரிக்கை

Forums Inmathi News விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க வைகோ கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11974
    Kalyanaraman M
    Keymaster

    விசிக எழுத்தாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

    ”விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக இதில் தலையிட்டு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், புதுவை மாநில அரசும், எழுத்தாளர் ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This