ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

Forums Inmathi News ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11973
  Kalyanaraman M
  Keymaster

  ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் செம்மரம் வெட்டிய புகாரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்துக்குட்பட்ட ராஜம்பேட் பகுதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக ஆந்திர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நள்ளிரவில் அங்கு சென்ற போலீஸார் அந்த கும்பலைச் சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் செம்மரம் வெட்டிய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

  சுட்டுக் கொல்லப்பட்டவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் எனத் தெரிய வந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு தப்பியோடிவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This