அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் துவக்கி வைத்து சைக்கிளில் பயணித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமாரிடம், அதிமுக ஆட்சி இப்போது போய் விடும் நாளை போய் விடும் என்று வாயாலேயே வடை சுடும் தினகரனின் கனவு என்றுமே பலிக்காது என்றார். மேலும் அவர் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை எச்சரித்து மிரட்டிப் பார்த்த மு.க.அழகிரி தற்போது பணிந்து செல்கிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.