Forums › Communities › Education › GATE தேர்வு : உதவித் தொகையுடன் படிப்பு! பொதுத்துறை நிறுவனங்களில் வேலை!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
September 1, 2018 at 12:17 pm #11968
Kalyanaraman M
Keymasterஇந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) போன்ற நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கேட் (Graduate Aptitude Test inEngineering – GATE) தேர்வை எழுத வேண்டும். சில கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் பிஎச்டி படிப்புக்கும் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. கேட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட தனி இடங்கள் உள்ளன.
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் (பிஎச்இஎல்), கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (கெயில்), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (எச்ஏஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்), நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (என்டிபிசி), நியூக்கிளியர் பவர் கார்ப்பரேஷன் (என்பிசிஎல், பவர் கிரிட் கார்ப்பேரஷன் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் தகுதியுடையவர்களை வேலைக்கு எடுக்கின்றன.
சீனியர் பீல்ட் ஆபீசர்(டெலி), சீனியர் ரிசர்ச் ஆபீசர் (கிரிப்டோ), சீனியர் பீல்ட் ஆபீசர் (அறிவியல் தொழில்நுட்பம்) போன்ற மத்திய அரசின் ஏ நிலை பணிகளுக்கு கேட் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஐஐஎஸ்சி, ஏழு ஐஐடிக்கள் இணைந்து இத்தேர்வை நடத்துகின்றன. தற்போது நடைபெற உள்ள கேட் தேர்வை சென்னை ஐஐடி நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.
இன்ஜினியரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்ச்சர் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் அறிவியல், கணிதம், புள்ளியியல், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர்களும் அறிவியலில் பி.எஸ். நான்கு ஆண்டு பட்டப் படிப்பைப் படித்த மாணவர்களும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு அல்லது டியூயல் டிகிரி படிப்பைப் படித்தவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். ஏஎம்ஐஇ, ஏஎம்ஐசிஇ படித்தவர்களும் பிஎஸ்சி படிப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் அல்லது தொழில்நுட்ப நான்கு ஆண்டு முதுநிலைப் படிப்புகளைப் படித்த மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்தப் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 2,,9, 10 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 21ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம். ரூ.1,500. பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.750.
மேலும் விவரங்களுக்கு: http://gate.iitm.ac.in/
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.