டோல்கேட்களில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடுமுழுவதும் உள்ள டோல்கேட்களில் பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில், தனி வழித்தடங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதை அமல்படுத்துவதில் சில சிக்கல் இருப்பதால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.