விநாயகர் சிலையை ஒற்றைசாளர முறையில் அனுமதிப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

Forums Inmathi News விநாயகர் சிலையை ஒற்றைசாளர முறையில் அனுமதிப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11934
    Kalyanaraman M
    Keymaster

    விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, ஒற்றைச்சாளர முறையில் அனுமதிப்பது குறித்து வரும் 4 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை வைக்கவும், கரைக்கவும் நிபந்தனைகளை விதித்து, கடந்த 9 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், சிலைகளை வைக்க உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத்துறை, மின்சார வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படியே புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, விநாயகர் சிலைகள் அமைக்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதிப்பது குறித்து வரும் 4 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This