Forums › Communities › Farmers › மூலிகைப் பூச்சி விரட்டி!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
August 31, 2018 at 4:58 pm #11913
Inmathi Staff
Moderatorபூச்சி தாக்குதலால் பாதிப்பு வந்தால் ரசாயன மருந்துகள் ஊறுவிளைவிப்பதால் (நமக்கு மட்டுமல்ல கால்நடைகளுக்கும் சேர்த்து தான்). அவற்றை நிறுத்தி மூலிகைப்பூச்சி விரட்டி பயன்படும். இதற்கு பூச்சிகளை சாகடிக்க வேண்டாம். இனப்பெருக்கம் செய்ய விடவும் வேண்டாம். விரட்டினாலே போதும். அவை தானாக குறைந்து பொருளாதார சேத நிலைக்குள் கட்டுப்பட்டு வாழ்வதற்கும் நமது சுற்றுச்சூழல் மாசுபடாமல் நலமான வாழ்வை நாம் வாழவும் வழி பிறக்கும்.
விவசாயிகள் தோட்டத்தில் சுற்றிப் பார்த்து கிடைக்கும் பல மூலிகைகளில் குறிப்பாக கால்நடைகள் உண்ணாதவை, கசப்பான சுவை கொண்டது. துர்நாற்றம் வீசுபவை மற்றும் பசையும் விஷத்தன்மையும் கொண்டதாக இருப்பது எது என சேகரித்து மண்புழுக்களை பாதிக்காதவைகள் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
குறிப்பாக எல்லாப்பகுதிகளில் வேலியிலும் பிற பகுதியிலும் வளர்ந்துள்ள மூலிகைகளில் நொச்சி இலை, சங்குப்பூ இலை, எருக்கம்பூ இலை, சோற்றுக் கற்றாழை இலை, வேப்பம் இலை, ஆடாதோடா இலை, கருவேலம் இலை, புங்கமர இலை மற்றும் விதைகள் அரளிப்பூ இலைகள் மற்றும் விதைகள், காட்டாமணக்கு இலைகள், ஊமத்தையின் இலைகள் மற்றும் காய்கள், சீதாப்பழ இலைகள் மற்றும் காய்கள், பப்பாளி இலைகள் புகையிலையின் உவர்தூள், உண்ணிச்செடி இலைகள், விளாம்பழ இலைகள், பிரண்டையில் அனைத்து பாகங்களும், மஞ்சத் தூள், தும்பைச்செடி, காக்காச் செடி, காட்டுப்புகையிலை மற்றும் ஆர்டீமிங்சியா இலைகள் இவற்றுள் குறைந்த பட்சம் 10 தாவரப் பொருட்களில் இருந்து தலா 0.500 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு 20 லிட்டர் பசுங்கோமியம் மற்றும் 2 கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கலந்து பிளாஸ்டிக் கொள் கலனில் அடைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இருமுறை கலக்க வேண்டும்.
இவை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும் இவற்றை வடிகட்டி தெளிவான கரைசலைக் கொண்டு தயாரிக்கலாம்.இலை 10 முதல் 15 நாட்களில் நொதித்தல் முறையில் தயாராகி விடும்.மற்றொரு முறையில் குறைந்தது 10 தாவரங்களின் பொருட்களை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்பானையில் 3 மணி நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை குளிர்ச்சி அடைந்ததும் 2 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் வைக்க வேண்டும்.
இதன் பிறகு வடிகட்டி இலைவழித் தெளிப்பு செய்தால் அதாவது இதில் 5 லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால் போதும்.பூரண பயிர்பாதுகாப்பு அனைத்து வித பூச்சிகள் தாக்குதலின்றி கிடைக்கும். இவை பயிர் ஊக்கியாகவும் செயல்படுவது இன்னொரு சிறப்பு.
– டாக்டர் பா.இளங்கோவன்,
உடுமலை. -
AuthorPosts
- You must be logged in to reply to this topic.