முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறாக தகவல்களை பரப்பிவருவதாக சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். முல்லைப்பெரியார் அணை பலமாக இருக்கிறது; அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக்கொள்ளலாம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாற்றில் 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.
கனமழையின் காரணமாக கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உபரி நீராக வெளியே வந்த காரணத்தினால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அதை காரணமாக வைத்துக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் தான் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என தவறான செய்தியை வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.