அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Forums Inmathi News அரசியல் கட்சியினருடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11905
    Inmathi Staff
    Moderator

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்  நடைபெற்றது.

    நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் ஒருமாதம் வரை நடைபெறும். இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும்.

    அங்கு சென்று வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். வாக்காளர் பெயர் இரட்டைப் பதிவு, போலி வாக்காளர்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This