பறக்கையில் மூன்று நாள் வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி

Forums Communities Fishermen பறக்கையில் மூன்று நாள் வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11890
  Kalyanaraman M
  Keymaster

  பறக்கை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக தலைவர் பேராசிரியர் ராவணேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கன்னியாகுமரி வளக்குன்றா நீருயிரி வளர்ப்பு பறக்கை மையத்தில் தேசிய மீன்கள் மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் நன்னீர் வண்ண மீன்வளர்ப்பு பயிற்சி வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

  இப்பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு தினப்படி மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04652-286107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். 25 இடங்கள் உள்ளதால் முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This