கரும்பை தாக்கும் நோய்கள்

Forums Communities Farmers கரும்பை தாக்கும் நோய்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11871
  Inmathi Staff
  Moderator

  கரும்பு சாகுபடியில் நோய் கட்டுப்பாடு முக்கியம். தாமதம் ஏற்பட்டால் உழவடை கூலி கூட கிடைக்காது. கரும்பு பயிரை தாக்கும் இளம் குருத்துப்புழுவை கட்டுப்படுத்த கிரேனுலோசஸ் வைரஸ் கரைசலை ஏக்கருக்கு 100 மில்லி மற்றும் 100 மில்லி டீப்பாலுடன் நடவு செய்த 35 மற்றும் 50 வது நாளில் மாலை நேரங்களில் 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

  10 கிலோ வேப்பங் கொட்டை துாளை 10 நாள் ஊர வைத்து 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். காய்ந்த குருத்துக்களை சேகரித்து அழிக்க வேண்டும். விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.

  ஒட்டுண்ணி கட்டுதல்

  ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைகோ கிராமா கைலானிஸ் முட்டை ஒட்டுண்ணியை 15 நாட்கள் இடைவெளியில் ஆறு முறை கட்ட வேண்டும். நடவு செய்த 150 மற்றும் 210 வது நாட்களில் காய்ந்த தோகைகளை அப்புறப்படுத்த வேண்டும். 10 கிலோ வேப்பங் கொட்டை சாறு அல்லது ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய், நான்கு கட்டி கதர் சோப்பு ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கலாம்.

  கரிப்பூட்டை நோய்

  நோய் தாக்கப்பட்ட குருத்துக்களை பிடுங்கி எரிக்க வேண்டும். 200 கிராம் கரையும் கந்தகத்தை 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். கரும்பில் 100 டன் மகசூல் பெற கரும்பு தோகையை உரித்த பின் வெற்றிலை கொடிக்கால் போன்று, குச்சிகளை கொண்டு கரும்பு சாயாமல் விட்டம் கட்டினால் 100 முதல் 110 டன் மகசூல் கிடைக்கும்.

  தொடர்புக்கு 09578669455.

  – வெ.ரெங்கசாமி
  ஓய்வு உதவி வேளாண் அலுவலர் திருச்சி.

  நன்றி: தினமலர்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This