தரமான கம்பு சாகுபடி முறைகள்

Forums Communities Farmers தரமான கம்பு சாகுபடி முறைகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11870
    Inmathi Staff
    Moderator

    கம்பு இறவையாகவும், மானாவாரியாகவும் எல்லா வகை நிலங்களிலும் பயிரிட ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 கொண்ட நிலங்கள் சிறந்தவை ஆகும்.
    மானாவாரியில் பயிரிட ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களும், இறவைக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஏற்றவை ஆகும். கே.எம்.2, கோ.(சியு).9இ, ஐசிஎம்வி.221 ஏற்ற ரகங்கள் ஆகும். மானாவாரியாக இருந்தால் எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். இறவையாக இருந்தால் எக்டேருக்கு 3.75 கிலோ தேவைப்படும்.
    வறட்சியை தாங்கி வளர பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமை 1 லிட்டர் நீர் கலந்து கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து பின்பு நிழலில் உலர்த்தி தன் எடைக்கு உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.
    50% தழைச்சத்து உரத்தை நட்ட 15வது நாள் மற்றும் 30வது நாள் பிரித்து மேலுரமாக இடவேண்டும்.
    விதைத்தவுடன் 4வது நாளும் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மற்றும் காலநிலைக்கு தகுந்தவாறு நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 15 மற்றும் 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.
    பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் பொருளாதார சேதார நிலை அறிந்து வேளாண்துறை அலுவலர் ஆலோசனையின்படி பயிர் பாதுகாப்பு மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டும்.
    கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலரையோ, வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This