வெள்ளப் பெருக்கால் கேரள மீனவர்களுக்கு 548.47 கோடி ரூபாய் இழப்பு

Forums Communities Fishermen வெள்ளப் பெருக்கால் கேரள மீனவர்களுக்கு 548.47 கோடி ரூபாய் இழப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11841
    Kalyanaraman M
    Keymaster

    கேரளாவில் சமீபத்திய வெள்ளப் பெருக்கில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறைக்கு மொத்தம் 548.47 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் மேர்சிகுட்டியம்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 26 கோடி ரூபாய் மதிப்பிலான மீனவர்களின் படகுகள் சரி செய்யப்பட முடியாத அளவு பழுதடைந்துள்ளதாகவும், 21.5 கோடி அளவிற்கு பழுது பார்க்கும் வகையிலான படகு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அத்துடன், 43.27 கோடி ரூபாய் மதிப்பிலான மீனவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்திருப்பதாகவும், 42.60 கோடி ரூபாய் மதிப்பிற்கு, வீடுகள் பழுதுபார்க்கும் நிலையில் சேதமுற்றிருப்பதாகவும் மீன் வளத்துறை அலுவலகங்கள் மற்றும் வாகன்ங்கள் ரூ. 10.3 கோடி அளவிற்கு சேதமுற்றிருப்பதாகவும் மீன் பண்ணைகள் 109.72 கோடி ரூபாய் அளவிற்கு சேதம்டைந்திருப்பதாகவும் கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This