மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா எடுத்த கேரள அரசு

Forums Communities Fishermen மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா எடுத்த கேரள அரசு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11836
    Inmathi Staff
    Moderator

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட மீனவர்களுக்கு இன்று அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. கேரளாவில் சமீபத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்பதில் மீனவர்களின் பங்கு பெருமளவில் இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களை இந்த மீனவர்கள் மீட்டனர்.

    ஏற்கனவே, மீனவர்களின் இந்த  நற்செயலைப் பாராட்டிய முதல்வர் பினறாயி விஜயன், மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3000 வீதம் வழங்கப்படும் என அறிவித்தார். அத்துடன் மீனவர்கள் கேரளத்தின் ராணுவம் என வர்ணித்தார். ஆனால், மீனவர்கள் தரப்பில் தாங்கள் செய்த இந்த நற்செயல்களுக்கு ஈடாக பணம் தேவையில்லை எனவும் அரசுன் கனிவுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினரைப் பாராட்டி வழியனுப்பிய கேரள அரசு இன்று, மீனவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தியது. இந்நிகழ்ச்சியில், முதல்வர் பினறாயி விஜயன், மீன்வளத் துறை அமைச்சர் மேர்சிகுட்டியம்மா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மீனவர்களும் கலந்து கொண்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This