செயற்கை கடற்கரையை உருவாக்கி புதுச்சேரி சாதனை

Forums Communities Fishermen செயற்கை கடற்கரையை உருவாக்கி புதுச்சேரி சாதனை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11834
  Inmathi Staff
  Moderator

  உலகின்  பல்வேறு  நாடுகளில்  செயற்கை  பாறைகளை  கட்டமைத்து  கடற்கரை  மணல்  பரப்பை  உருவாக்குவது  போன்று  40 ஆண்டுகளுக்கு  முன்பு  கடல்  அரிப்பால் காணாமல்  போன  அழகிய  மணல்  பரப்பைக்கொண்ட  கடற்கரையை  மீண்டும்  உருவாக்கி  இந்திய  அரசின்  புவி  அறிவியல்  அமைச்சகத்தின்  (M.E.S) கீழ்  இயங்கும்  தேசிய  பெருங்கடல்  தொழில்நுட்ப  நிறுவனம்  (N.I.O.T) இந்தியாவில்  முதன்முறையாக  சாதனை  படைத்துள்ளது.    இந்தியாவின் அழகிய நீண்ட  அகலமான  மணற்பரப்பை கொண்டிருந்தது  புதுச்சேரி நகரத்தை  ஒட்டியுள்ள  கடற்கரை  .

  புதுச்சேரிக்கு வருகை தந்த அப்போதய பிரதமர்  திரு.  ஜவஹர்லால்  நேரு,  புதுச்சேரி  கடற்கரையின்  அழகை  ரசித்து  ஆகிய நாடுகளின்  அற்புதமான  அழகிய  கடற்கரையில்  புதுச்சேரி  கடற்கரையும்  முதன்மையான   ஒன்று   என்று   வர்ணித்தார்.

  அத்தகைய  கடற்கரை  1974ம் ஆண்டில்  புதுச்சேரி கடற்கரையின் தெற்கு பகுதியில்  நகரத்தை  ஒட்டி  வம்பாகீரப்பாளையம்  அருகே  கடற்கரையில்  இருந்து  சரக்குகளை  கையாள்வதற்காக துறைமுகம் என்ற பெயரில்  சரியாக  திட்டமிடப்படமல்,  விஞ்ஞான ரீதியான  புவியியல்  ரீதியான  அனுபவ  அறிவை பயன்படுத்தாமல்  கட்டப்பட்ட  நீண்ட பாலம்  கட்டுமானத்தால், புதுச்சேரியின் அழகிய  கடல்  மணல்  பரப்பு  காணாமல்  போனது.  கடல்  அரிப்பு  காரணமாக  கரையில்  இருந்து  500 மீட்டர்  வரை  மணல்பரப்பாக  மக்களை  கவர்ந்து  ஈர்த்து  வந்த  அழகையே கடற்கரை,  கடல்  சீற்றத்துக்கு  இறையாகிவிட்டது

  சரியாக  திட்டமிடாமல்  கட்டப்பட்ட துறைமுகம் பாலம்  (PIER) ஏற்படுத்திய கடல் அரிப்பு  ஒருகட்டத்தில்  புதுச்சேரி  நகரின்  அழகிய  கடற்கரைச் சாலையை  கபளீகரம்  செய்ய  முனைந்தது

  மனிதர்களால் செயற்கையாக  உருவாக்கப்பட்ட  கட்டமைப்பால்  இயற்கையால்  சீரழிக்கப்பட்ட  கடற்கரையை  காப்பாற்றுகிறோம்  என்ற பெயரில்  ஆட்சியாளர்கள்,   அதிகாரிகள்  அவ்வப்போது  குன்றுகளை   அழித்து கல்குவியல்களை   லாரி  லாரியாக   கொண்டு  வந்து  கடற்கரையில்  கொட்டி  தங்கள்    எண்ணங்களை     ஈடேற்றிக் கொண்டார்கள்.

  இயற்கைக்கு  முரணாக  இக்குவியல்கள்  கொட்டக் கொட்ட  கற்கள்  சரிந்து  ஒரு பக்கம்  கடலுக்கு  இரையானது.  மறுபக்கம்  கற்குவியலுக்கு  வடக்குப்பகுதியில்  கடல்  அரிப்பு  ஏற்பட்டு  மீனவர்களின் வீடுகள், குடியிருப்புகள், படகுகள், வலைகள், ஆகியவற்றை   கடல்  காவு  வாங்கத்தொடங்கியது.   இதே  நிலை  தொடர்ந்து வந்தது.

  40  ஆண்டுகளாக   புதுச்சேரி  நகரின்   கடற்கரையில்   ஏற்பட்ட   இந்த அவல நிலையை  போக்க  எடுக்கப்பட்ட  நடவடிக்கை  காரணமாக  மத்திய  அரசின் சுற்றுசூழல்  அமைச்சராக  இருந்த  திரு  ஜெய்ராம் ரமேஷ்  அவர்கள்  புதுச்சேரியில்  ஒரு  நிகழ்ச்சியில்  பங்கேற்க  வருகை  தந்த  போது,  புதுச்சேரி  கடற்கரைக்கு  அழைத்து வரப்பட்டு  புதுச்சேரியின்  அழகிய கடற்கரையை  மீண்டும்  மீட்கக்கூடிய  திட்டம்  பற்றி  விவாதிக்கப்பட்டது.

  அதன் தொடர்ச்சியாக  இந்திய  அரசின்  புவி  அறிவியல்  (Ministry of Earth Science) அமைச்சகத்தின் மூலம் ரூ 25 கோடியில்  ஒரு திட்டம்  தயாரிக்கப்  பட்டது.  இத்திட்டம்   தேசி  பெருங்கடல்  தொழில்நுட்ப  நிறுவனம் (N.I.O.T) மூலம்  திட்ட இயக்குனர்  டாக்டர். எம்.வி. ரமணமூர்த்தி  அவர்கள்  தலைமையிலான  தொழில்நுட்ப  வல்லுனர்கள், கொண்ட  குழுவினரால்  கடந்த  ஓராண்டாக  மேற்கொள்ளப்பட்டு  கட்டுமானப்பணிகள்  நடந்து  வந்தது.

  புதுச்சேரி  நகரத்தில்  அழகிய  கடற்கரை  மணல்  பரப்பை  40 ஆண்டுகளுக்கு  பின்னர்  மீண்டும்  ஏற்படுத்துவதற்கான   இந்த  திட்டத்தில்  கடற்கரைச்சாலையில்  உள்ள  புதுச்சேரி  அரசு  தலைமை  செயலகம், பிரெஞ்சு   தூதரகம்  அமைந்துள்ள  பகுதிக்கு  அருகாமையில்  கடற்கரையை  ஒட்டிய  அண்மைக்கடலில்  கடல்  நீரில்  மூழ்கக்கூடிய  செயற்கை  பாறை  போன்ற  ஒரு அமைப்பை  60 மீட்டர்  நீளம்  50 மீட்டர்  அகலம்  2.5 மீட்டர்  உயரம்  கொண்டதாக  900 டன்  கொண்டதாக  வடிவமைத்து  அதை  மிகுந்த  கவனத்துடன்  கடலில்  ஆழ்த்தியுள்ளனர்.

  கடலில்  தண்ணீருக்குள்  மூழ்கச்செய்ய   சரியான  கண்காணிப்பு  நடவடிக்கைகளுடன் தொழில்நுட்ப  வல்லுனர்கள்  ஏராளமான  தொழிலாளர்கள்  ஈடுபட்டனர்.    ஓராண்டுக்கு   மேலாக   ரூ  25 கோடிசெலவில்  ஏராளமான  தொழிலாளர்களின் உழைப்பால்  திட்ட  இயக்குனர்  டாக்டர். திரு. எம்.வி. ரமணமூர்த்தி  மற்றும்  அவருடைய  தலைமையிலான  தொழில்நுட்ப  வல்லுனர்கள்  மேற்பார்வையில்  நடைபெற்ற  பணி நேற்று  முடிவடைந்து  கடலுக்குள்  ஆழ்த்தப்பட்டது.

  புதுச்சேரி அரசின் மாண்புமிகு முதலமைச்சர்  திரு. வி. நாராயணசாமி, துறைமுகத்துறை  மற்றும்  அறிவியல்  தொழில்நுட்பத்துறை  அமைச்சர்  மாண்புமிகு  திரு.  எம். கந்தசாமி  அவர்கள்  இந்த  பணிகளை  தொடர்ந்து  பார்வையிட்டு  ஆலோசனை  வழங்கி  வந்தனர்.

  புதுச்சேரி  அரசின்   பொதுப்பணித்துறை,  துறைமுகத்துறை,  அறிவியல்  தொழில்நுட்பத்துறை  உயர் அதிகாரிகள்  மேற்பாவையில்  பணிகள்  நடைபெற்று  வந்தது.    பணிகள்  நிறைவடைந்து  மணல்திட்டு  உருவாக  தொடங்கியுள்ளது  கண்டு  புதுச்சேரி பொதுமக்களும்  சுற்றுலா  பயணிகளும்  மகிழ்ச்சி   அடைந்துள்ளனர்.

  இந்தியாவிலேயே  தற்போது  கோவாவைப்போல் புதுச்சேரியிலும்  லட்சக்கணக்கான  சுற்றுலா  பயணிகள்  குவிந்து  வருகிறார்கள்.    வார   இறுதி  நாட்களிலும், தேசிய  விடுமுறை  நாட்களிலும்  முன்  எப்போதும்  இல்லாத  அளவுக்கு  தினசரி  பல ஆயிரம்  சுற்றுலா  பயணிகள்,  தமிழகம்,  கர்நாடக  உள்பட  நாட்டில்  பல பகுதிகளிலிருந்தும்  வெளிநாடுகளில்  இருந்தும்  குவிந்து  வருகின்றனர்.

  அழகிய  அமைதியான  கடற்கரை  சூழலுக்காக  புதுச்சேரி வருகை தரும் சுற்றுலா பயணிகள்  கண்டுகளிக்க, அமர்ந்து  அனுபவிக்க  மணல்  பாங்கான  மற்றொரு  “மெரினா”  தயாராகி வருகிறது.   புதுச்சேரிக்கே  உரித்தான  “பிற” எதிர்பார்ப்புகளோடு  அற்புதமான  கடற்கரையை  காண  இனி  கூடுதலாக  சுற்றுலா  பயணிகள்  வருகை  தருவார்கள்  என  சுற்றுலா  துறை  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார்.

  புதுச்சேரிக்கு  வருகை  தரும்  சுற்றுலா  பயணிகளுக்கும்,  பயணிகளை  நம்பியுள்ள  தொழிலில்,  வியாபாரத்தில்  ஈடுபட்டுள்ளவர்களுக்கும்  இனி  கொண்டாட்டம்  தான்  என்றார்  அவர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This