ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக சித்தரித்ததாக வைரமுத்து மீது புகார்

Forums Inmathi News ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக சித்தரித்ததாக வைரமுத்து மீது புகார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11833
    Inmathi Staff
    Moderator

    ஏற்கனவே ஒரு நாளிதழில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும், அவர் வருத்தம் தெரிவித்த நிலையில் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

     

    கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதியிருப்பதாக கவிஞர் வைரமுத்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நாளிதழ் ஒன்றில் கவிஞர் வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரையில் கால்டுவெல்லின் வாழ்க்கை வரலாறு, சமுதாயப் பணி உள்ளிட்டவை குறித்து எழுதியுள்ளார். இந்நிலையில் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி என்ற அமைப்பின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில் வைரமுத்துவின் கட்டுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This