மத்திய அரசின் திட்டங்களில் எதிர்க்க வேண்டியதை தமிழக அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்த அரசு தலையாட்டாது என்றார். மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்று இருந்த போது அதிகாரத்தை கைப்பற்றுவது குறித்து மட்டுமே கவலைப்பட்டதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.