லாபம் தரும் கோவக்காய் சாகுபடி

Forums Communities Farmers லாபம் தரும் கோவக்காய் சாகுபடி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11819
  Inmathi Staff
  Moderator

  கோவக்காய் நல்ல வருவாய் தரக்கூடியது மட்டுமின்றி, ஆண்டு முழுவதும்சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

  ஜூன், ஜூலை மாதங்கள், கோவக்காய் சாகுபடிக்கு உகந்த சீசனாகும்.

  எனினும், ஏப்., மாதம் துவங்கி, டிச., மாதம் வரை, இதை சாகுபடி செய்து, நல்ல வருவாய் ஈட்ட முடியும்.

  இது குறித்து, பல்லடம் அடுத்த கேத்தனூர் பகுதியில், இயற்கை விவசாயம் செய்து வரும் பழனிசாமி கூறியதாவது:

  கோவக்காய், ஆண்டு முழுவதும் பயிரிட்டு, லாபம் தரக்கூடியது. கொடி ஒன்றுக்கு, 500க்கும் மேலான காய் கிடைக்கும். மருத்துவ குணம் கொண்ட கோவக்காயை, இயற்கை முறையில் சாகுபடி செய்தால், கூடுதல் பலன் கிடைக்கும். இதில், கருங்கோவை, மூவிரல் கோவை, ஐவிரல் கோவை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

  ரத்த சுத்தி, சரும பாதிப்பு, கண் நோய், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கு, கோவக்காய், சிறந்து மருந்து. இலை, காய் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. பீன்ஸ், புடலை போன்றே, இதையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். சொட்டுநீர் பாசனமுறையில், கம்பி பந்தல் அமைத்து, இயற்கை முறையில் பயிரிட்டால். உள்ளூர் மார்க்கெட்டில் மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பலாம்.

  நன்றி: தினமலர்

   

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This