தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த நசிமுதீன் இடமாற்றம் செய்த அரசாணையை ரத்து செய்ய கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த அதிகாரி நசிமுதீன் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவியில் ஷம்பு கல்லோலிகர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.