மண்டபம் தென்கடற்கரை பகுதியில் கொட்டப்படும் நண்டு கழிவால் நோய் பரவும் அபாயம் உள்ளது.மண்டபம் பகுதியில் 500க்கும் அதிகமான விசைப்படகு மற்றும் 400க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பிடித்து வரும் நண்டு போன்ற மீன்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் நண்டு ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்கின்றனர். நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் நண்டுகளை மொத்தமாக வாங்கி நண்டை அவித்து தரம் பிரிந்து வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இந்த நண்டு கம்பெனிகளில் தரம் பிரிக்கப்படும் நண்டு கழிவுகளை பாலீதின் பைகளில் சேகரித்து மண்டபம் தென்கடற்கரை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் தென்கடற்கரை பகுதியில் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் நிலையுள்ளது. இதனால் மண்டபம் தென்கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் நோய் ஏற்படும் என அஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் மண்டம் பேரூராட்சி நிர்வாகம் தென் கடல் பகுதியில் நண்டு கழிவுகளை கொட்டும் நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.