திமுக தலைவராக முக.ஸ்டாலின் இன்று முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.இன்று காலை அண்ணா அறிவலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், திமுக தணிக்கைக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர் ஸ்டாலின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதை பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். அறிவிப்பைத் தொடர்ந்து மேடையேறிய ஸ்டாலின் அங்கிருந்த அண்ணா மற்றும் கலைஞர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அன்பழகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.