மறைந்த தலைவர்களுக்கு திமுக பொதுக்குழு அஞ்சலித் தீர்மானம்

Forums Inmathi News மறைந்த தலைவர்களுக்கு திமுக பொதுக்குழு அஞ்சலித் தீர்மானம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11757
  Kalyanaraman M
  Keymaster

  திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஐ நா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான், கருணா நிதியின் மறைவின் போது இறந்து போன 248 பேர், மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  அத்துடன், கருணாநிதியின் மரணத்தின் போது பலியானவர்கள் குடும்பத்திற்கு திமுக சார்பில் தலா 2 லட்சம் வீதம் வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This