திமுக தலைவராக முக.ஸ்டாலின் தேர்வுச் செய்யப்பட இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தகவல்

Forums Inmathi News திமுக தலைவராக முக.ஸ்டாலின் தேர்வுச் செய்யப்பட இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11735
  Kalyanaraman M
  Keymaster

  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை தேர்வு செய்யப்படவிருப்பதாக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர், பொருளாளர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெறும் அவகாசம்,  பகல் 1 மணியுடன் முடிவடைந்தததாக தெரிவித்தார்.

  திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயர் மட்டுமே உள்ளதாக கூறினார். செவ்வாய்கிழமை நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன் முடிவுகளை அறிவிக்க இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This