ஒக்கிப் புயலின்போது மாயமான மீனவர்கள் உயிரிழந்ததாக கருதப்பட்டு, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு முதற்கட்டமாக அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.அதோடு, ஒக்கி புயலின்போது மாயமான மீனவர்கள், உயிரிழந்ததாக கருதப்பட்டு, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு பணி நியமன ஆணைகளை, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
முதற்கட்டமாக மாயமான மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு அடுத்தடுத்து அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.