வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11702
    Kalyanaraman M
    Keymaster

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனத்தாலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூர், மதுரை, தெற்கு காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This