70 % மக்களை மீட்ட மீனவர்களுக்கு கேரள அமைச்சர் பாராட்டு

Forums Communities Fishermen 70 % மக்களை மீட்ட மீனவர்களுக்கு கேரள அமைச்சர் பாராட்டு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11655
  Inmathi Staff
  Moderator

  கேரளா   மாநிலம்   பந்தனம்திட்டா   மாவட்டத்தில்   மழை, வெள்ளத்தில்   சிக்கி   தவித்த   70  சதவீத  மக்களை   மீட்பதில்   பெருமைக்குரிய   பணியாற்றியவர்கள்   மீனவ   சமுதாயத்தினர்  என்று  கேரளா   மாநில   மீன்வளத்துறை   அமைச்சர்   திருமதி   மெர்சிகுட்டி   அம்மா   பாராட்டு   தெரிவித்துள்ளார்.

  வெள்ள   நிவாரண   பணிகளில்   கேரளா  மாநில   மீனவர்கள்  பங்களிப்பு   குறித்து   மீன்வளத்துறை  அமைச்சர்  திருமதி  மெர்சிகுட்டி  அம்மா   செய்தியாளர்களிடம்   கூறியதாவது:

  பந்தனத்திட்டா   மாவட்டத்தில்   மழை   வெள்ளத்தில்   சிக்கி தவித்த   மக்களில்   70  சதவீத   மக்களை   மீனவர்களும் ,  15  சதவீத   மக்களை   ராணுவத்தினரும்   மீதி   15   சதவீத   மக்களை   மற்ற   உள்ளூர்  ,மக்களும்   காப்பாற்றி   மீட்டு   வந்தனர்.

   

  மாநிலம்   முழுவதும்  வெள்ளத்தில்  சிக்கித்தவித்த  65 ஆயிரம் மக்களை   2,826   மீனவர்கள்   முயற்சி   எடுத்து   மீட்டுள்ளனர்.

  மீனவர்களின்  படகுகளை  பழுது  பார்க்கவும்,   படகுகளுக்கான  வெகுமதியும்   முதலமைச்சர்  நிவாரண  நிதியிலிருந்து  வழங்கப்படவுள்ளது.  வருகின்ற   29ம்  தேதி  திருவனந்தபுரத்தில்   தொகைகளையும்  பாராட்டு  சான்றிதழ்களையும் மீனவர்களுக்கு    முதலமைச்சர்   பினராய்  விஜயன் வழங்க   உள்ளார்.

  ஆகஸ்ட் 15ம்  தேதியிலிருந்து  மீன்வளத்துறையினர், நிவாரண  பணியில்  ஈடுபட்ட  மீனவர்களை  ஒருங்கிணைத்தனர்.  தொடக்கத்தில் 33 படகுகள் மீட்பு பணியில்  ஈடுபட தொடங்கி  இறுதியாக 669  மீன் பிடி படகுகள்  மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது   படகுகளை  மீட்பு  பணிக்கு  கொண்டுவர  மீன்வளத்துறை  வாகன  வசதி  செய்து  கொடுத்திருந்தது..

  கேரளாவுக்குள்  வந்த  பிற மாநில லாரிகள்  படகுகளை  கொண்டு  செல்ல  பயன்படுத்தும்  பட்டத்தோடு    படகுகளுக்கு  தேவையான  டீசல், மண் எண்ணை  மீனவர்களுக்கான உணவு போன்றவை  கட்டுப்பாடு  அரை  மேற்பார்வையில்  போலீஸ்  வாகனங்களில்  கொண்டு  செல்லப்பட்டு  வழங்கப்பட்டது

  நிவாரணம்,  மற்றும்  மீட்பு  பணியில்  ஈடுபட்ட  படகுகளுக்கு  நாள் ஒன்றுக்கு  தலா ரூ. 3000/-  வழங்கப்படும் என்பது  அரசு  அறிவித்திருந்த  தொகையுடன்  மீனவர்களுக்கு  நாள்  ஒன்றுக்கு  தலா ரூ. 300/- வீதம் வெகுமதி  வழங்கப்படும்

  மீட்பு  பணியில் சேதமடைந்த  படகுகளையும், இன்ஜின்களையும்  பழுது நீக்குதலில்  தாமதம்  ஏற்பட்டால்  மீனவர்களுக்கு  வருவாய்  இழப்பு  ஏற்படும்  என்பதால், ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஈடுபடுத்தப்பட்டுள்ளது   மீன்வளத்துறை,  பணிமனைகள் மட்டுமல்லாமல்  மாநிலத்தில்  உள்ள  பிற தனியார்  பணிமனைகளிலும்  படகுகளை பழுது நீக்க  உரிய  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

  மீனவர்களுக்கான  பல்வேறு  புதிய  திட்டங்களை  செயல்படுத்துவதன்மூலம்   இடைத்தரகர்கள் பிடியிலிருந்து  கேரள  மாநில  மீனவர்களை  மீட்டு  பொது  நீரோட்டத்தில் கலக்க வைக்க  தீவிர  நடவடிக்கைகள்   எடுக்கப்பட்டு   வருகிறது.

  இவ்வாறு   அமைச்சர்   தெரிவித்தார்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This