பைபர் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு

Forums Communities Fishermen பைபர் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #11651
  Inmathi Staff
  Moderator

  குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் பிராங்கிளின்.மீன்பிடி தொழிலாளி.  நேற்று முன்தினம் மாலை பிராங்கிளின் தனது பைபர் படகில் குளச்சல் துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க தனியாக சென்றார். இந்தநிலையில் இரவு 9.30 மணியளவில் மண்டைக்காடு கடல் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையால் பிராங்கிளின் படகு கவிழ்ந்தது. உயிருக்கு போராடிய பிராங்கிளின் கரையை நோக்கி நீந்தினார்.

  இந்த சமயத்தில் அவ்வழியாக முட்டத்தை சேர்ந்த சகாய ரெஜின் என்பவரின் பைபர் படகு வந்தது. அவர் உயிருக்கு போராடிய பிராங்கிளினை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் பிராங்கிளினின் படகு கடலில் இன்ஜின், வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் மூழ்கியது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This