ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.அர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடுக்கும் இடைப்பட்ட கோரி கடற்கரையில் நேற்று சுமார் 150 கிலோ எடை கொண்ட பெரிய ஆமை ஒன்று அடிபட்ட நிலையில் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த சுமார் 150 கிலோ எடை கொண்டதாக அந்த ஆமையை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மிகுந்த ஆச்சர்யத்துடன் நின்று வேடிக்கை பார்த்தனர்.
இதே போல் கம்பிப்பாடு அருகே பச்சைப்புட்டி கடற்கரையிலும் அருகருகே 2 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன.கரை ஒதுங்கி கிடந்த ஆமைகளை கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் ஆமைகளின் உடல்களை குதறியும் சாப்பிட்டு வருகின்றன.ஆமைகள் இறந்த நிலையில கரை ஒதுங்கி கிடப்பதால் கடற்கரை பகுதியே துர்நாற்றம் வீசி வருகின்றது.கரை ஒதுங்கிகடக்கும் ஆமைகளானது கடலில் நீந்தும் போது கடல் அலைகளின் வேகத்தால் பாறைகளில் மோதி அடிபட்டு நீந்த முடியாமல் இறந்து கரை ஒதுங்கிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.