தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவிற்கே செல்ல வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
திருச்சி சமயபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநாவுக்கரசர் மீண்டும் பாஜகவில் சேர்ந்தால், அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்றும், காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.