திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். நாளை மறுநாள் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் மறைவை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் கடந்த 14ஆம் தேதி, திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.