தமிழகம் முழுவதும் வலுவிழந்த, பழைய பாலங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நூறாண்டுகளை கடந்த பாலங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
சமீபத்தில், திருச்சி முக்கொம்பு கதவணையில் 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டு பாலமும் துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிரபாகர், 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பாலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் வலுவிழந்த பாலங்கள் இடித்து அகற்றப்படும் என அறிவித்து இருந்தார்.
இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாலங்கள், கதவணைகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 8 பாலங்கள் வலுவிழந்து இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுக்குடிநீர் குழாய்கள், தொலைபேசி இணைப்பு வயர்களை அகற்றிய பின்னர் இடிக்கும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கரை கீழணையும் ஆய்வு செய்யப்படவுள்ளது.
Source :Polimer News