- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Kalyanaraman M.
-
AuthorPosts
-
August 25, 2018 at 9:02 pm #11604
Kalyanaraman M
Keymasterகடந்த 2 மாத காலங்களில் மட்டும் கடலில் மீன்பிடிக்கச்சென்ற விசைப்படகுகள் கவிழ்ந்து 40 மீனவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதால் விபத்துகளை தவிர்க்க மீன்வளத்துறை தீவீர நடவடிக்கைகளை அறிவித்துள்ளது
மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநில மக்கள் விரும்பி சாப்பிடும் ஹில்சா மீன்கள் மிக அதிக அளவில் கிடைக்கும் பருவகாலம் என்பதால் இரண்டு மாநிலங்களிலும் உள்ள மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள், ஆழ்கடல் டிராலர் படகுகள் மற்றும் மோட்டார் பொறுத்தப்படாத நாட்டு படகுகளில் கடந்த 2 மாதங்களாக போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்து வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் 3 மீன்பிடி துறைமுகங்களான நம்கானா, பிரேசர்கன்ஞ் மற்றும் காத்தீப் ஆகியவற்றிலிருந்து சுமார் 10 ஆயிரம் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகள் கடலில் மீன்பிடிக்கச்செல்கின்றனர் அவற்றுள் 5,500 படகுகள் ஆழ்கடல் மற்றும் அண்மைக்கடலில் மீன்பிடிக்கும் இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் ஆகும்.
இத்தகைய படகுகள் பயணிக்கும்போது கடலில் சில பகுதிகளில் அடிக்கடி படகுகள் கவிந்து விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது
இது சம்மந்தமான ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கு வங்க மீன்வளத்துறை அடிக்கடி படகுகள் கவிழும் ஆபத்தான பாதைகளை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டில் கடந்த சுமார் 2 மாதங்களில் மட்டும் படகுகள் கவிழ்ந்து 40 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயகரமான பாதைகளில் புதிய மிதவைகளை மிதிக்கவிட்டு அந்த பாதையில் பயணிக்க வேண்டாம் என்று படகுகளை எச்சரிக்கை செய்ய மீன்வளத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில ஐக்கிய மீனவர் நல சங்க தலைவர் திரு. பிஜன் மைதி, ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஹில்சா மீன் அதிகமாக கிடைக்கும். இந்த குறிப்பிட்ட மாதங்களில் தான் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒரே சமயத்தில் குறிப்பிட்ட இலக்கு நோக்கி பயணிக்கும் போது விபத்து நிகழ்வதாக தெரிவித்துள்ளார்.
இக்கால கட்டத்தில் மேற்கு வங்க மக்கள் மிகவும் ருசித்து உண்ணும் ஹில்சா மீன் அதிக அளவில் கிடைக்கும் என்றாலும், கடலின் தன்மை பலவாறாக மாறி மாறி தோற்றம் அளிக்கும் என்பதால் விபத்து நிகழ்ந்து விடுகிறது என்றும் மீனவ சங்க தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய விபத்துகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என்றும், அரசும் அத்தகைய நடவடிக்கைள் எடுக்க தொடங்கியுள்ளது என்றும் அவை எத்தகைய பலனை அளிக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்றும் மீனவ சமுதாய தலைவர் கூறினார்.
படகு மூழ்கி கடலில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவிகளை திருமதி மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு வழங்கி வருகிறது,
-
This topic was modified 2 years, 4 months ago by
Kalyanaraman M.
-
This topic was modified 2 years, 4 months ago by
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.