திமுக மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என திருமாவளவன் நம்பிக்கை

Forums Inmathi News திமுக மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என திருமாவளவன் நம்பிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #11590
    Kalyanaraman M
    Keymaster

    வரும் 30 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் தலைப்பில் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், பாஜக தலைவர் அமித் ஷாவும் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தொல்.திருமாவளவன், “கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வதை தேர்தல் அரசியலுடன் பார்க்க முடியாது. மதவாத சக்திகளுடன் திமுக கூட்டணி வைக்காது என நம்புகிறோம்” என தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This