தான் செப்டம்பர் 5 அன்று நடத்தப் போகும் பேரணியால் திமுகவிற்கு ஆபத்து ஏற்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் செப்டம்பர் 5 இல் நடத்தும் பேரணியால் திமுகவில் இணைய மீண்டும் வாய்ப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர்கள் தான் அதனை முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.